Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோபு - யோபு 34

யோபு 34:18-34

Help us?
Click on verse(s) to share them!
18ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ?
19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே.
20இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்; பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
21அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
22அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, மரணஇருளுமில்லை.
23மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார்.
24ஆராய்ந்து முடியாதவிதத்தில், நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார்.
25அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.
26அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும்,
27எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும், சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர்,
28எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், மக்கள் சிக்கிக்கொள்ளாமலும்,
30ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?
31நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவம் செய்யமாட்டேன்.
32நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் செய்தேனென்றால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே.
33நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
34யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,

Read யோபு 34யோபு 34
Compare யோபு 34:18-34யோபு 34:18-34