Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 6

1 இராஜா 6:1-19

Help us?
Click on verse(s) to share them!
1இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 வருடத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நான்காம் வருடம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
2சாலொமோன் ராஜா யெகோவாவுக்குக் கட்டின ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது.
3ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சமமாக 30 அடி நீளமும், ஆலயத்திற்கு முன்னே 15 அடி அகலமுமாக இருந்தது.
4பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்தான்.
5அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி இடச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுச்சுவரைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
6கீழே இருக்கிற சுற்றுச்சுவர் 7.6 அடி அகலமும், நடுவே இருக்கிறது 9 அடி அகலமும், மூன்றாவதாக இருக்கிறது 10.6 அடி அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான்.
7ஆலயம் கட்டப்படும்போது, அது வேலைசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
8நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
9இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான்.
10அவன் 7.6 அடி உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
11அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
12நீ என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நீதி நியாயங்களை நிறைவேற்றி, என்னுடைய கற்பனைகளின்படியெல்லாம் நடந்துகொள்ளும்படி, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு சொன்ன என்னுடைய வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
13இஸ்ரவேல் மக்களின் நடுவிலே இருந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
14அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
15ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தரை துவங்கி சுவர்களின் மேற்கூரைவரை, கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையால் செய்து, ஆலயத்தின் தரையை தேவதாரு மரங்களின் பலகைகளால் தரையை மூடினான்.
16மூடப்பட்ட தரைதுவங்கி சுவர்களின் மேற்கூரைவரை ஆலயத்தின் பக்கங்களைத் தொட்டிருக்கிற 30 அடி நீளமான மறைப்பையும் கேதுரு பலகைகளால் செய்து, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதியினிடமாகக் கட்டினான்.
17அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை 60 அடி நீளமாக இருந்தது.
18ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்கூட காணப்படாமல் எல்லாம் கேதுரு மரமாக இருந்தது.
19யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்திற்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தினான்.

Read 1 இராஜா 61 இராஜா 6
Compare 1 இராஜா 6:1-191 இராஜா 6:1-19