Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 20

1 இராஜா 20:31-39

Help us?
Click on verse(s) to share them!
31அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் சணலாடைகளை எங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளை எங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடு வைப்பார் என்று சொல்லி,
32சணலாடைகளைத் தங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளைத் தங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் வந்து: என்னை உயிரோடு வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்செய்கிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடு இருக்கிறானா, அவன் என்னுடைய சகோதரன் என்றான்.
33அந்த மனிதர்கள் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின்சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடம் வந்தபோது, அவனைத் தன்னுடைய இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.
34அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என்னுடைய தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என்னுடைய தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைசெய்து அவனை அனுப்பிவிட்டான்.
35அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மகன்களில் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படி தன்னுடைய நண்பனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனிதன் அவனைப் பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
36அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போனதால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனைவிட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.
37அதின்பின்பு அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனிதன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
38அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன்னுடைய முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, மாறுவேடமிட்டு வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.
39ராஜா அவ்வழியாக வருகிறபோது, இவன் ராஜாவைப் பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு; இவன் தப்பிப்போனால் உன்னுடைய உயிர் அவன் உயிருக்குச்சமமாக இருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்.

Read 1 இராஜா 201 இராஜா 20
Compare 1 இராஜா 20:31-391 இராஜா 20:31-39