Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - நியாயாதி - நியாயாதி 20

நியாயாதி 20:7-18

Help us?
Click on verse(s) to share them!
7நீங்கள் எல்லோரும் இஸ்ரவேலர்கள், இங்கே ஆலோசித்துத் தீர்மானம்செய்யுங்கள் என்றான்.
8அப்பொழுது எல்லா மக்களும் ஒருமித்து எழும்பி: நம்மில் ஒருவரும் தன்னுடைய கூடாரத்திற்குப் போகவும்கூடாது, ஒருவனும் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பவும்கூடாது.
9இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு எதிராகப் போவோம்.
10பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார்கள் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தகுந்ததாக மக்கள் வந்து செய்யும்படி, நாம் தானியங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேர்களில் பத்துப்பேரையும், ஆயிரம் பேர்களில் நூறுபேரையும், பத்தாயிரம் பேர்களில் ஆயிரம்பேரையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
11இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஒன்றுபோல ஒருமித்து பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,
12அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார்கள் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
13இப்பொழுது கிபியாவில் இருக்கிற துன்மார்க்க மக்களாகிய அந்த மனிதர்களை நாங்கள் கொன்று, தீமையை இஸ்ரவேலைவிட்டு விலக்கும்படி, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச் சொன்னார்கள்; பென்யமீனியர்கள் இஸ்ரவேல் மக்களாகிய தங்கள் சகோதரர்களின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
14இஸ்ரவேல் மக்களோடு யுத்தம்செய்யப் புறப்படும்படி, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
15கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட 700 பேரைத் தவிர அந்த நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயத்தால் சண்டையிடுவதற்கு பயிற்சி பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை 26,000 பேர் என்று கணக்கிடப்பட்டது.
16அந்த மக்கள் எல்லோரிலும் தெரிந்துகொள்ளப்பட்ட, இடதுகைப் பழக்கமுள்ள 700 பேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக் கவண்கல் எறிவார்கள்.
17பென்யமீன் கோத்திரத்தைத் தவிர இஸ்ரவேலிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற மனிதர்கள் நான்கு லட்சம்பேர் என்று கணக்கிடப்பட்டது; இவர்கள் எல்லோரும் யுத்தவீரர்களாக இருந்தார்கள்.
18இஸ்ரவேல் மக்களான அவர்கள் எழுந்து, பெத்தேலுக்குப் போய்: எங்களில் யார் முதலில் போய் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் யெகோவா: யூதா முதலில் போகவேண்டும் என்றார்.

Read நியாயாதி 20நியாயாதி 20
Compare நியாயாதி 20:7-18நியாயாதி 20:7-18