6அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.
7மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
8எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.