1யெகோவா ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக.
2யெகோவா சீயோனில் பெரியவர், அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
3மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.