Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 92

சங் 92:6-12

Help us?
Click on verse(s) to share them!
6மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.
7துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
8யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
9யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.
10என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.
11என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.
12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

Read சங் 92சங் 92
Compare சங் 92:6-12சங் 92:6-12