7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.
8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
9முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.