Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - அப் - அப் 20

அப் 20:10-22

Help us?
Click on verse(s) to share them!
10உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.
11பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
13பவுல் ஆசோ பட்டணம்வரைக்கும் தரைவழியாகப் போகத் திட்டமிட்டிருந்தான். நாங்கள் கப்பல் ஏறி, பவுலுக்கு முன்னதாகவே ஆசோ பட்டணத்திற்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்லவேண்டுமென்று அவன்‌ திட்டம் செய்திருந்தார்.
14அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்கு வந்தோம்.
15அடுத்தநாளில் கீயு தீவிற்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து,
16பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் இருக்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல், எபேசு பட்டணத்திலிருந்து கடந்துபோகவேண்டுமென்று அவசரப்படுத்தி, மறுநாளிலே சாமு தீவை அடைந்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்திற்கு வந்தோம்.
17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான்.
18அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
19நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன்.
20பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,
21தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
22இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியானவரிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது.

Read அப் 20அப் 20
Compare அப் 20:10-22அப் 20:10-22