8உன் மதிப்பின்படி செலுத்தமுடியாத ஏழையாக இருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைசெய்தவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
9“ஒருவன் பொருத்தனைசெய்தது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் யெகோவாவுக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக.
10அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளைத்துப்போனதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாக இருப்பதாக.
11அது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
12ஆசாரியன் அது நல்லதானாலும் இளைத்ததானாலும் அதை மதிப்பீடு செய்வானாக; உன் மதிப்பின்படியே இருப்பதாக.