Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோசு - யோசு 4

யோசு 4:8-12

Help us?
Click on verse(s) to share them!
8யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, யெகோவா யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தான் நதியின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
9யோர்தான் நதியின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
10மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் மக்களுக்குச் சொல்லும்படி, யெகோவா யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்து முடிக்கும்வரைக்கும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நின்றார்கள்; மக்கள் வேகமாகக் கடந்துபோனார்கள்.
11மக்களெல்லோரும் கடந்துபோனபின்பு, யெகோவாவுடைய பெட்டியும் கடந்துபோனது; ஆசாரியர்கள் மக்களுக்கு முன்பாகப் போனார்கள்.
12ரூபன் கோத்திரத்தார்களும் காத் கோத்திரத்தார்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாக இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.

Read யோசு 4யோசு 4
Compare யோசு 4:8-12யோசு 4:8-12