1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.
5இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,
6இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய்.
7உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
8உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.
9எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
11உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.