5தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
6சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக.
7உமக்காக நிந்தையைச் சகித்தேன்; அவமானம் என்னுடைய முகத்தை மூடினது.