4இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
5அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.