Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 32

சங் 32:4-8

Help us?
Click on verse(s) to share them!
4இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)
6இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது.
7நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

Read சங் 32சங் 32
Compare சங் 32:4-8சங் 32:4-8