2நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
3அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
4அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
5அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.