4மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.
5என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை.
6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.
7உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.
8கண்மணியைப்போல் என்னைக் காத்து.
9என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.