7பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே,
8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
9மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, எல்லா கேதுருக்களே,
10காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
11பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,
12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, யெகோவாவை துதியுங்கள்.
13அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.