1ஆரோகண பாடல். என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
2என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4யெகோவாவோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.