3எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
5அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
7உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
8என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.