21“இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிடத்திலே அவர்களை அழித்துப்போடுவேன்” என்றார்.
22அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள்.
23அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
24“கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார்.
25உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள்.
26அவன் சபையாரை நோக்கி: “இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள்” என்றான்.
27அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தைவிட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்களுடைய மனைவிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்களுடைய கூடாரவாசலிலே நின்றார்கள்.