Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 8

1 இராஜா 8:4-11

Help us?
Click on verse(s) to share them!
4பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிப்பொருட்கள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியர்களும், லேவியர்களும், அவைகளைச் சுமந்தார்கள்.
5ராஜாவாகிய சாலொமோனும் அவனோடு கூடிய இஸ்ரவேல் சபை மக்கள் அனைவரும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்கும் இல்லாத திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள்.
6அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் உள் அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திலே கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.
7கேருபீன்கள் பெட்டி இருக்கும் இடத்திலே தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
8தண்டுகளின் முனைகள் உள் அறைக்கு முன்னான பரிசுத்த இடத்திலே காணப்படும்படியாக அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்த நாள் வரைக்கும் அங்கேதான் இருக்கிறது.
9இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின்பு யெகோவா அவர்களோடு உடன்படிக்கை செய்கிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
10அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போது, மேகமானது யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.
11மேகத்தினால் ஆசாரியர்கள் ஊழியம் செய்வதற்கு நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.

Read 1 இராஜா 81 இராஜா 8
Compare 1 இராஜா 8:4-111 இராஜா 8:4-11