Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 18

1 இராஜா 18:16-25

Help us?
Click on verse(s) to share them!
16அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடன், ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
17ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நீயல்லவா என்றான்.
18அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நான் அல்ல; யெகோவாவின் கட்டளைகளைவிட்டு பாகால்களைப் பின்பற்றியதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவர்கள்.
19இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்புவிக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் 400 பேரையும் என்னிடம் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
20அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
21அப்பொழுது எலியா எல்லா மக்களுக்கும் அருகில் வந்து: நீங்கள் எதுவரைக்கும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; யெகோவா தெய்வம் என்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வம் என்றால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், மக்கள் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
22அப்பொழுது எலியா மக்களை நோக்கி: யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் மீதியாக இருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ 450 பேர்.
23அவர்கள் இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதை துண்டுத் துண்டாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கட்டும்; நான் மற்றக் காளையையும் அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
24நீங்கள் உங்களுடைய தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியால் பதில் சொல்லும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு மக்களெல்லோரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
25அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகராக இருப்பதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்செய்து, நெருப்புப்போடாமல் உங்கள் தெய்வத்தினுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.

Read 1 இராஜா 181 இராஜா 18
Compare 1 இராஜா 18:16-251 இராஜா 18:16-25