30யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவனே கொண்டுவரவேண்டும்; மார்புப்பகுதியையும் அதனுடன் அதின்மேல் வைத்த கொழுப்பையும் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக் கொண்டுவரக்கடவன்.
31அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்; மார்புப்பகுதி ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்.
32உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.