Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லேவி - லேவி 27

லேவி 27:24-30

Help us?
Click on verse(s) to share them!
24யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
25உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
26“முதற்பிறந்தவைகள் யெகோவாவுடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் யெகோவாவுடையது.
27சுத்தமல்லாத மிருகத்தினுடைய முதற்பிறந்ததாக இருந்தால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
28“ஒருவன் தன்னிடத்திலுள்ள மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது, சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும் யெகோவாவுக்கென்று நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.
29மனிதர்களில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவர்களெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
30“தேசத்திலே நிலத்தின் வித்திலும், மரங்களின் பழங்களிலும், தசமபாகம் எல்லாம் யெகோவாவுக்கு உரியது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.

Read லேவி 27லேவி 27
Compare லேவி 27:24-30லேவி 27:24-30