43இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
44என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
46தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
47என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48ஜீவ அப்பம் நானே.
49உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.