Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோசு - யோசு 19

யோசு 19:4-22

Help us?
Click on verse(s) to share them!
4எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,
5சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.
7மேலும் ஆயீன், ரிம்மோன். ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
8இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கே இருக்கிற ராமாத்வரை இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு.
9சிமியோன் கோத்திரத்தார்களுடைய பங்கு யூதா கோத்திரத்தார்களின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா கோத்திரத்தார்களின் பங்கு அவர்களுக்கு மிகுதியாக இருந்தபடியால், சிமியோன் கோத்திரத்தார் அவர்களுடைய பங்குகளின் நடுவிலே பங்குகளைப் பெற்றார்கள்.
10மூன்றாம் சீட்டு செபுலோன் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சொந்தமான பங்குவீதம் சாரீத் வரை உள்ளது.
11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்னியாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
12சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
13அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே காத்தேப்பேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.
14அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
15காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
16செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும்.
17நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
18இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
19அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
20ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
21ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
22அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு.

Read யோசு 19யோசு 19
Compare யோசு 19:4-22யோசு 19:4-22