26துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.