2என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
3என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.