62தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
63அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
64அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
65அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,