3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
4உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
5நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும்.