1செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.