Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 5

சங் 5:1-8

Help us?
Click on verse(s) to share them!
1புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், என்னுடைய தியானத்தைக் கவனியும்.
2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
5வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர்.
6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.
7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
8யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

Read சங் 5சங் 5
Compare சங் 5:1-8சங் 5:1-8