2எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,
4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும்.
5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.
6உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.