2தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)
3ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
4நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
5நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; யெகோவா என்னைத் தாங்குகிறார்.