Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 36

சங் 36:2-9

Help us?
Click on verse(s) to share them!
2அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
4அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
5யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
6உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
9வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

Read சங் 36சங் 36
Compare சங் 36:2-9சங் 36:2-9