3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
5அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
6அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.