Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - உன்னத - உன்னத 3

உன்னத 3:1-5

Help us?
Click on verse(s) to share them!
1இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
2நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
3நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
4நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; நான் அவரை என் தாயின் வீட்டிலும், என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்.
5எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளி

Read உன்னத 3உன்னத 3
Compare உன்னத 3:1-5உன்னத 3:1-5