Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லேவி - லேவி 20

லேவி 20:3-13

Help us?
Click on verse(s) to share them!
3அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படி, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போகச் செய்வேன்.
4அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் மக்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்டுகொள்ளாமல் இருந்தால்,
5நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பின்னே மோளேகை விபசாரமார்க்கமாகப் பின்பற்றின அனைவரையும், தங்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோகச் செய்வேன்.
6“ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன்.
7ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராக இருங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
8என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.
9“தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தாயையும் சபித்தான், அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
10“ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
11தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
12ஒருவன் தன் மருமகளோடே உறவுகொண்டால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு செய்தார்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
13ஒருவன் பெண்ணோடே உடலுறவு கொள்கிறதுபோல ஆணோடே உடலுறவுகொண்டால், அருவருப்பான காரியம் செய்த அந்த இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

Read லேவி 20லேவி 20
Compare லேவி 20:3-13லேவி 20:3-13