31எல்காத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், ரேகோபையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.
32நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதினுடைய வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தானையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
33கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
34மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
35திம்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், நகலாலையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.