Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - நீதி - நீதி 6

நீதி 6:12-22

Help us?
Click on verse(s) to share them!
12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
13அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.
14அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, வழக்குகளை உண்டாக்குகிறான்.
15ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.
16ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை,
18மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால்,
19பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.
20என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.
21அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள்.
22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.

Read நீதி 6நீதி 6
Compare நீதி 6:12-22நீதி 6:12-22