5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
6நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
7ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.