Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - நீதி - நீதி 13

நீதி 13:20-25

Help us?
Click on verse(s) to share them!
20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.
21பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
22நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
23ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
24பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
25நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.

Read நீதி 13நீதி 13
Compare நீதி 13:20-25நீதி 13:20-25