6இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
7ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?
8அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?
9தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)