1எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல். நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.