Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 66

சங் 66:13-19

Help us?
Click on verse(s) to share them!
13சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;
14என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
15ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
17அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
18என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.
19மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

Read சங் 66சங் 66
Compare சங் 66:13-19சங் 66:13-19