2என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
3நீர் எனக்கு அடைக்கலமும், எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.
4நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)