2அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
4அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
7என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
8உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
9உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
10எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.