Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 29

சங் 29:1-6

Help us?
Click on verse(s) to share them!
1தாவீதின் பாடல். தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.

Read சங் 29சங் 29
Compare சங் 29:1-6சங் 29:1-6