Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 22

சங் 22:11-17

Help us?
Click on verse(s) to share them!
11என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, உதவி செய்ய யாரும் இல்லை.
12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.
13பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள்.
14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.
15என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூசியிலே போடுகிறீர்.
16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
17என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Read சங் 22சங் 22
Compare சங் 22:11-17சங் 22:11-17